2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

ஆசன வாய் வழி வாயுவால் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Ilango Bharathy   / 2022 ஜூலை 19 , மு.ப. 09:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரேசிலைச் சேர்ந்தவர் விக்டோரியா டி ஃபெலிஸ்.  21 வயதான இவர், சமூக வலைத்தளத்தில் மிக பிரபலமான   Influencer-களில் ஒருவர் ஆவார்.

இவரை சுமார், 23 மில்லியன் பேர், இன்ஸ்டா கிராமில் பின்தொடர்ந்து  வருகின்றனர்.
இந்நிலையில்,  அண்மையில் தனது காதலருடன் இசை நிகழ்ச்சி ஒன்றில் விக்டோரியா கலந்து கொண்டபோது, திடீரென அவருக்கு தாங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு உடல் வலி ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக நெஞ்சு உள்ளிட்ட உடலின் பல பகுதிகளில் இருந்து  அதிக வேதனை அவருக்கு ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக மருத்துவமனை ஒன்றில் அவர் அனுமதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த விக்டோரியா ”தனது காதலன் முன்பு வைத்து ஆசன வாய் வழியே வாயு வெளியேற்ற, விக்டோரியா தயங்கியதாகவும், .

 இதன் காரணமாக, அதனை அடக்கிய படி, நிறைய நேரம் தனது வாயுவை கட்டுப்படுத்தவே அவர் உடல் முழுவதும் வேதனை தொடங்கி, மருத்துவமனை வரை சென்று சேர்த்துள்ளது எனவும் தற்போது  உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சக்கர நார்காளி ஒன்றில் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் இணையத்தில் விக்டோரியா பகிர்ந்துள்ளார்.
பொதுவாக, ஆசன வாய் வழி வாயு என்பது அனைவரது உடலில் இருந்தும் வெளியேறுவது தான். அப்படி வெளியேறுவதை சிலர் சற்று அருவருக்க விஷயமாக கண்டாலும், அதனை வெளியேற்றி அவமானம் கொள்ள வேண்டாம் என கருதும் போது, இது போன்று சில அசம்பாவிதங்கள் கூட நிகழலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .