Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 டிசெம்பர் 27 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐ.நா.வில் இந்தியா அளித்த மனிதாபிமான உதவிகள் மற்றும் ஆதரவுக்கு உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.
ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பிரதமர் மோடி, உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் தொலைபேசி வாயிலாக பேசினார்.
அப்போது தனது அமைதி திட்டத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று மோடி ஜெலன்ஸ்கியிடம் கோரிக்கை வைத்தார். மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் போர் காரணமாக உக்ரேனில் இருந்து நாடு திரும்பிய 22,500 இந்திய மாணவர்களின் கல்வியை எளிதாக்குவதற்கு உதவுமாறும் ஜெலன்ஸ்கியிடம் மோடி கோரிக்கை வைத்தார்.
இதுகுறித்து ஜெலன்ஸ்கி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றுள்ளதற்கு இந்திய பிரதமர் மோடிக்கு எனது வாழ்த்தை தெரிவித்தேன்.
அமைதியை செயல்படுத்துவதில் இந்தியாவின் பங்களிப்பை நான் நம்புகிறேன். ஐ.நா.வில் இந்தியா அளித்த மனிதாபிமான உதவி மற்றும் ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்” என்று பதிவிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனை, உக்ரேன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கடந்த வாரம் சந்தித்தார். இந்தச் சந்திப்பை ரஷ்ய ஜனாதிபதி விளாமிடீர் புட்டின் கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
17 May 2025
17 May 2025