Ilango Bharathy / 2023 பெப்ரவரி 01 , மு.ப. 09:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
1 நிமிடம் வரையிலான வீடியோவைப் பதிவேற்றும் வசதியை இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் ‘Stories‘ என்ற பிரிவில் முன்னர் 1 நிமிட வீடியோவை பதிவேற்றம் செய்தால், அது 15 செக்கன் வீடியோக்களாக 4 பிரிவுகளாகப் பிரிந்து பதிவேற்றம் ஆகும்.
இதனால் வீடியோ பதிவேற்றம் செய்வோர், 15 செக்கன்கள் வீடியோக்களாக பதிவேற்றும் நிலை காணப்பட்டது.

இப் பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு கடந்த ஆண்டு குறிப்பிட்ட சிலரிடம் மாத்திரம் புதிய வசதியை இன்ஸ்டாகிராம் பரிசோதித்து வந்தது.
இதில் கிடைத்த முடிவின் அடிப்படையில், உலகம் முழுவதும் 1 நிமிட வீடியோவை பதிவேற்றும் வசதியை இன்ஸ்டாகிராம் தற்போது அறிமுகம் செய்துள்ளது.
இது இன்டாகிராம் பயனர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago