Editorial / 2026 ஏப்ரல் 13 , பி.ப. 08:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், தன்னை இயேசு கிறிஸ்துவுக்கு நிகராகச் சித்தரிக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தற்போது அந்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புகைப்படத்தில் டிரம்ப், இயேசு கிறிஸ்துவைப் போன்ற நீண்ட அங்கி அணிந்து, தெய்வீக ஒளி வீசும் தோற்றத்தில் காட்சியளிக்கிறார்.
அவர் ஒரு ஏழைக்கு உதவி செய்வது போன்றும், அவருக்கு அருகில் தேவதூதர்களைப் போல அவரது ஆதரவாளர்கள் சூழ்ந்திருப்பது போன்றும் அந்தச் சித்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புகைப்படத்தின் பின்னணியில் 'சுதந்திர தேவி சிலை' (Statue of Liberty) காணப்படுகிறது. இதன் மூலம் அமெரிக்க அடையாளத்தை அவர் மேலும் வலியுறுத்த முயன்றுள்ளதாகத் தெரிகிறது.
5 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
13 Apr 2026