Freelancer / 2026 மார்ச் 19 , மு.ப. 02:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் உயிரிழந்துள்ளார். மேலும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதி அருகே ‘பங்கர் பஸ்டர்’ குண்டுகளை வீசி அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.
அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளுக்கும், ஈரானுக்கும் இடையில் கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் போர் நடைபெற்று வருகிறது. இதனால், வளைகுடா நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் ஈரானின் உளவுத் துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டதாக, இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸ் நேற்று (18) அறிவித்துள்ளார். இதை ஈரான் ஜனாதிபதி மசூத் பெஸ்கியான் உறுதி செய்துள்ளார். (a)
3 hours ago
7 hours ago
18 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
18 Mar 2026