Freelancer / 2026 பெப்ரவரி 15 , மு.ப. 06:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரானை அச்சுறுத்தும் வகையில் 2 ஆவது போர்க் கப்பலை அமெரிக்கா அனுப்பி வைக்கும் என்று ட்ரம்ப் நிர்வாகத்தை சேர்ந்த உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
ஈரானில் கொமேனி அரசுக்கு எதிராக மக்கள் உள்நாட்டு கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு கட்டுப்பாடுகளை எதிர்த்தும் சுதந்திரம் வேண்டியும் பொதுமக்கள் ஈரான் முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மீது அரசு கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஈரான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்தார்.
அதற்காக ஏற்கெனவே ஒரு போர்க் கப்பலை மத்திய கிழக்குப் பகுதிக்கு அனுப்பி வைத்தார். ஆனால், ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரானும் எச்சரித்தது.
இந்நிலையில், மத்திய கிழக்குப் பகுதியில் ஏற்கெனவே உள்ள போர்க் கப்பலுக்கு உதவியாக ‘யு.எஸ்.எஸ். ஜெரால்டு ஆர் போர்டு’ என்ற 2 ஆவது போர்க் கப்பலை அமெரிக்கா அனுப்பி வைக்கும் என்று ட்ரம்ப் நிர்வாகத்தை சேர்ந்த உயரதிகாரி தெரிவித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கும் பணிகளில் ஈடுபடுவதாக ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அந்தப் பின்புலத்திலும் ஈரானில் உள்நாட்டு கலவரமும் சேர்ந்துள்ளதால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதை தணிக்க ஓமன் மற்றும் கட்டாரில் ஈரான் - அமெரிக்கா உட்பட முத்தரப்பு பேச்சுவார்த்தை கடந்த வாரம் நடத்தப்பட்டது. எனினும், அந்தப் பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்படவில்லை.
இதையடுத்து, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் ஏற்கெனவே இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நடைபெற்றுவரும் சண்டை மத்திய கிழக்குப் பகுதி முழுவதும் பரவும் என்று வளைகுடா நாடுகள் எச்சரித்து வருகின்றன.
இந்நிலையில் அமெரிக்கா 2 ஆவது போர்க் கப்பலை மத்திய கிழக்குப் பகுதிக்கு அனுப்பினால் நிலைமை மோசமாகும் என்று அஞ்சப்படுகிறது. (a)
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago