Freelancer / 2025 பெப்ரவரி 06 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் என்ற நாடே இருக்காது எனத் தெரிவித்த டொனால்ட் ட்ரம்ப், அவர்கள் அழிக்கப்படுவார்கள் எனவும் எதுவும் மிச்சமிருக்காது எனவும் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது, ட்ரம்பை கொலை செய்வதற்கு ஈரான் நாட்டில் சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது.
ஈரான் நாட்டின் குத்சு படையின் தலைவராக இருந்த காசிம் சுலைமானி என்பவர், கடந்த 2020ஆம் ஆண்டில் ஆளில்லா விமானம் கொண்டு நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனை தொடர்ந்து, அப்போது அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ட்ரம்ப் மற்றும் முன்னாள் வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ உள்ளிட்டோருக்கு ஈரானில் இருந்து கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. இதன் விளைவாக ட்ரம்புக்கு எதிராக தொடர்ந்து அச்சுறுத்தல்கள் வருகின்றன.
இந்த ஈரானின் சதி முறியடிக்கப்பட்டதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நீதித்துறை அறிவித்தது.
இந்நிலையில் ஈரான் மீது அதிகப்படியான அழுத்தம் கொடுக்கும் உத்தரவுகளில் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் ஈரான் தன்னைக் கொன்றால் அதை அழிக்க வேண்டும் என்று ஆலோசகர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக கூறினார்.
மேலும், ஈரான் என்ற நாடே இருக்காது அவர்கள் அழிக்கப்படுவார்கள், எதுவும் மிச்சமிருக்காது என கடும் எச்சரிக்கை விடுத்தார்.
13 minute ago
39 minute ago
49 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
39 minute ago
49 minute ago
52 minute ago