2026 மார்ச் 29, ஞாயிற்றுக்கிழமை

’எமது எதிரிகள் உங்கள் நிலத்தை பயன்படுத்த அனுமதிக்காதீர்கள்’

Freelancer   / 2026 மார்ச் 29 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீங்கள் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் விரும்பினால், எங்கள் எதிரிகள் உங்கள் நிலங்களிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள் என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் வளைகுடா நாடுகளுக்குக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பில் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்,

ஈரான் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்தாது என்று நாங்கள் பலமுறை கூறியுள்ளோம். ஆனால் எங்கள் உள்கட்டமைப்பு அல்லது பொருளாதார மையங்களை குறிவைத்தால், அதற்கு நாங்கள் வலுவாக பதிலடி கொடுப்போம்.

பிராந்திய நாடுகளுக்கு: நீங்கள் வளர்ச்சியையும் பாதுகாப்பையும் விரும்பினால், எங்கள் எதிரிகள் உங்கள் நிலங்களிலிருந்து போரை நடத்த அனுமதிக்காதீர்கள் என்று தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .