Janu / 2026 மார்ச் 29 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் 1 கோடியே 32 இலட்சம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கடத்தி வர முயன்ற இலங்கையர் ஒருவர் உட்பட நால்வர், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (29) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பை சேர்ந்த 33 வயதுடைய வர்த்தகர் ஒருவரும், கொழும்பு 'போர்ட் சிட்டி' திட்டத்தில் பணிபுரியும் சீன பெண் ஒருவர் மற்றும் இரு சீன ஆண்களும் அடங்குவர்.
துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-648 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்து விமான நிலையத்தின் "கிரீன் சேனல்" ஊடாக வெளியேற முயன்ற போதே இவர்கள் அதிகாரிகளிடம் சிக்கியுள்ளனர்.
இவர்கள் கொண்டு வந்த 6 பயண பொதிகளை சோதனையிட்ட போது, அவற்றுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு தயாரிப்பான "மென்செஸ்டர்" (Manchester) வகை 88,000 சிகரெட்டுகள் அடங்கிய 440 கார்ட்டூன்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.
டி.கே.ஜி. கபில

24 minute ago
30 minute ago
38 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
38 minute ago
2 hours ago