Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 02 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தைச் சேர்ந்தவர் ‘மார்கரெட் பெக் கொல்லெர் என்ற மூதாட்டி.
அவரது பெற்றோருக்கு அவர் ஒரே பிள்ளை என்பதால், சிறு வயதிலிருந்தே அவர் தனிமையில் தனது பொழுதுகளைக் கழித்து வந்துள்ளார் எனவும், இதனால் பெரிய குடும்பமொன்றில் வாழ வேண்டும் என அவர் விரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது இளம் வயதில் பெக், வில்லியம் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார் எனவும், இவர்களுக்கு 11 பிள்ளைகள் பிறந்துள்ளனர் எனவும், அவர்கள் மூலம் 56 பேரப்பிள்ளைகள், 101 கொள்ளுப் பேரப்பிள்ளைகள் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நவம்பர் மாத இறுதியில் 100ஆவது பிறந்த நாளைக் கொண்டாடவுள்ள பெக், தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் சுமார் 250 குடும்ப உறுப்பினர்களைச் சந்திக்க ஆவலுடன் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
36 minute ago
30 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
30 Mar 2026