2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

காத்திருந்த யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி

Ilango Bharathy   / 2021 டிசெம்பர் 27 , மு.ப. 08:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவைச்  சேர்ந்த யுவதியொருவர் அண்மையில்  வீட்டிலிருந்தவாறு பிரபல உணவகமொன்றின்  உணவை ஓடர் செய்திருந்தார்.

இந்நிலையில் சிறிது நேரத்தின் பின்னர் வீட்டை அடைந்த அவ்உணவை திறந்து பார்த்த போது அதில் கோழியின் தலையொன்று  முழுமையாக பொரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதனையடுத்து  அவ்வுணவை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளப் பக்கங்களிலும் அவர்  பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அந்நிறுவனத்திற்கு தெரியவரவே  ”தாம்  உணவுகளைப்  புதிதாகத்  தயாரித்து தான் வழங்குவதாகவும்,கண்காணிப்பில் ஏற்பட்ட சிறிய தவறால் இவ்வாறு நடந்துள்ளதாகவும் இனி இவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்வதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் குறித்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .