Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 ஜூன் 19 , பி.ப. 10:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் ஒரு வாரமாகத் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன.
தற்போதைய சூழலில் இந்த மோதல் முடிவுக்கு வர வாய்ப்பில்லை. இதற்கிடையே ஈரான் உயர்மட்ட தலைவர் அயத்துல்லா அலி கமேனியை கொல்லும் பிளான் குறித்து கூறிய கருத்துகள் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த விவகாரத்தில் ஒப்பீட்டளவில் இஸ்ரேலின் கை தான் ஓங்கி இருக்கிறது. ஈரானின் தலைநகர் தெஹ்ரான் தொடங்கிப் பல முக்கிய நகரங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தின.
இதில் ஈரானுக்கு இழப்புகள் மிக மோசமாகவே இருந்தது. இந்தச் சூழலில் தான் ஈரானின் உயர்மட்ட தலைவரான கமேனி மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவல் பரவியது. இந்த பிளான் அமெரிக்கா வரை போனதாகவும் இருப்பினும் டிரம்ப் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என்றும் தகவல் பரவின.
ஈரான் உயர்மட்ட தலைவர் அயத்துல்லா அலி கமேனியை கொல்லும் வாய்ப்பை நெதன்யாகு நிராகரிக்கவில்லை. குறிவைக்க வாய்ப்புள்ளதை நிராகரிக்கவில்லை. அதாவது அயத்துல்லா அலி கமேனியை கொல்லும் திட்டம் இருக்கிறதா என்ற கேள்விக்கு அவர் இல்லை என்ற பதிலைச் சொல்லவில்லை. மாறாக அவர், "இப்போது எல்லா ஆப்ஷன்களும் ஓபனாகவே இருக்கிறது. அனைத்தையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். இப்போது அது குறித்த கூடுதல் தகவல்களைப் பகிர விரும்பவில்லை. ஈரானில் அரசில் பங்கு கொண்டு இருக்கும் யாரும் தப்பிக்க முடியாது. நான் சும்மா பேச விரும்பவில்லை. பொறுத்திருந்து பாருங்கள். எங்கள் திட்டத்தை ஆக்ஷனில் தெரிந்து கொள்ளுங்கள்" என்றார்.
அணு ஆயுதங்கள் விவகாரத்தில் அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் ஈரான் உடன்பாட்டை எட்ட மறுத்தே வந்தது. இந்தச் சூழலில் தான் திடீரென கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயனை இஸ்ரேல் ஆரம்பித்தது.
ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்யும் பணிகளைத் தீவிரம் காட்டி வருவதாகச் சொல்லியே இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் ஈரானின் உள்கட்டமைப்பு மிக மோசமாகச் சேதம் அடைந்து வருகிறது.
ஈரான் பதிலடி கொடுக்க முயன்றாலும் இஸ்ரேலைச் சமாளிக்க முடியவில்லை. அமெரிக்கா இந்த மோதலில் நேரடியாகத் தலையிடவில்லை. இருந்த போதிலும், அவர்கள் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். டிரம்பும் கூட ஈரான் சரணடையும் வரை தாக்குதலைத் தொடரவே அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது. R
23 minute ago
29 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
29 minute ago
45 minute ago