2025 மே 19, திங்கட்கிழமை

கரப்பான் வளர்க்க ரூ. 7 இலட்சம்

Freelancer   / 2022 ஜூன் 17 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவின் வடக்கு கரோலினா பகுதியில் 'தி பெஸ்ட் இன்ஃபார்ம் 'என்ற பூச்சிக்கொல்லி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் அண்மையில் ஓர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில் 'வீட்டில்  100 கரப்பான் பூச்சிகள் வரை  வளர்ப்பவர்களுக்கு  2,000 டொலர்கள் (இலங்கை மதிப்பில் சுமார் 7 இலட்சம் ரூபாய்)  வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இந் நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய பூச்சிக்கொல்லி அமைப்பு எவ்வாறு  வேலை செய்கிறது என்பதை பரிசோதனை செய்வதற்காக, இப்புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிட்டத்தட்ட 30 நாட்களுக்கு இந்த பரிசோதனை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X