Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2023 ஜனவரி 23 , மு.ப. 10:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
'வெர்வெட்' குரங்குகள் தெற்கு மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவை பூர்வீகமாகக் கொண்டவை ஆகும்.
இவ்வகை குரங்குகள் 17ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதிகளில் கரீபியன் தீவுப்பகுதிகளை வந்தடைந்ததாகக் கூறப்படுகின்றது.
இந்நிலையில், கரீபியன் நாடான சின்ட் மார்டனில் உள்ள ஒட்டுமொத்த ‘வெர்வெ‘ட் குரங்குகளையும் அழிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வகை குரங்குகள் தங்கள் விவசாய நிலங்களில் பயிர்களைத் தாக்கி வாழ்வாதாரத்தையே அழித்து வருவதாக விவசாயிகள் தொடர்ந்து புகாரளித்து வந்த நிலையிலேயே அரசு குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் அரசு நிதியுதவியில் தொண்டு நிறுவனம் மூலம் அடுத்த 3 வருடங்களில் சுமார் 450-க்கும் அதிகமான குரங்குகள் கொலை செய்யப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் குறித்த குரங்குகளைக் கொல்வதற்குப் பதிலாக அவற்றுக்குக் கருத்தடை செய்வது சிறந்த வழியென்று விலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago