2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சீனாவிலிருந்து இந்தியாவுக்கு தாவிய அப்பிள்

Freelancer   / 2022 ஒக்டோபர் 02 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் பூச்சிய கொவிட் கொள்கைகள் மற்றும் பொது முடக்கங்கள் காரணமாக தனது புதிய ஐபோன் 14ஐ இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியுள்ளதாக அப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

பெருமளவிலான திறன்பேசிகளை சீனாவில் தயாரித்த போதும்  வொஷிங்டனுக்கும் பீஜிங்கிற்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருவதால் சில உற்பத்திகளை சீனாவுக்கு வெளியே மாற்றியுள்ளது. 

கடந்த மாதம் ஐபோன் 14 அறிமுகப்படுத்தப்பட்டிருந்த நிலையில், அதை இந்தியாவில் தயாரிப்பதற்கு மகிழ்ச்சியடைவதாக அப்பிள் குறிப்பிட்டுள்ளது.

அப்பிளின் பெரும்பாலான திறன்பேசிகளை உற்பத்தி செய்யும் தாய்வானைத் தளமாகக் கொண்ட ஃபொக்ஸ்கான் நிறுவனம், 2017 ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் இயங்கி வருகிறது.

இந்திய திறன்பேசி (ஸ்மார்ட்போன்) சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் மிகவும் மலிவான தென் கொரிய மற்றும் சீன ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிட அப்பிள் நிறுவனமானது போராடி வருகிறது.

இந்தியாவில் உற்பத்தி என்று வருகையில், உதிரிப்பாகங்கள் மற்றும் ஏனைய வரிகள் மீது அதிக இறக்குமதி வரிகள் இருப்பதால், இந்தியர்கள் தங்கள் ஐபோனில் 'மேட் இன் இந்தியா' குறிச்சொல்லைப் பார்க்கும்போது, ​​​​அதை சொந்தமாக்க அவர்கள் இன்னும் அதிக தொகை செலுத்த வேண்டியிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவில் ஐபோன் உற்பத்தி அதிகரித்துள்ளது என்ற அறிவிப்பு பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

நாட்டின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்ட அவரது அரசாங்கம் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் "மேக் இன் இந்தியா" பிரச்சாரத்தைத் தொடங்கியது.

அப்பிள் இந்த ஆண்டு ஐபோன் உற்பத்தியில் 5% ஐ இந்தியாவுக்கு மாற்றும் என்று எதிர்பார்க்கிறோம் என்று முதலீட்டு வங்கியான ஜேபி மோர்கனின் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

2025 ஆம் ஆண்டுக்குள் அனைத்து ஐபோன் உற்பத்தியில் நான்கில் ஒரு பங்கு தெற்காசிய நாட்டில் இருக்கும் என்றும் வங்கி  அறிக்கை கணித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X