Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 10 , பி.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடுமையான கொவிட் -19 பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நெரிசலான எல்லைகள் காரணமாக, சீனாவுக்கும் வியட்நாமுக்கும் இடையிலான நிலப்பரப்பு வர்த்தகம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் கடுமையான சரிவைக் கண்டுள்ளதாக வியட்னாமின் விஎன் எக்ஸ்பிறஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
வியட்நாமிய நிறுவனங்கள் வெறும் 509 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பொருட்களை எல்லை வழியாக சீனாவுக்கு அனுப்பியுள்ளதாகவும் வருடத்துக்கு 87 சதவீத குறைவு ஏற்பட்டுள்ளதாகவும் சுங்கத் தரவை மேற்கோள் காட்டி குறித்த நிறுவனம் அறிக்கையிட்டுள்ளது.
சீனாவில் இருந்து இறக்குமதியும் 52.5 சதவீதம் குறைந்து 3.64 பில்லியன் டொலராக உள்ளது என்று அறிக்கை கூறுகிறது.
சீனாவின் பூச்சிய கொவிட் மூலோபாயம் மற்றும் எல்லை தாண்டிய இயக்கத்தின் இறுக்கமான கட்டுப்பாடு ஆகியவை இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளன என்று வியட்நாமின் தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
போக்குவரத்து, தளவாடங்கள் மற்றும் எல்லை தாண்டிய வர்த்தக உள்கட்டமைப்பு இல்லாததால் நிலைமை மோசமடைந்துள்ளதாக விஎன் எக்ஸ்பிறஸ் தெரிவித்துள்ளது.
லாங் சோனில் உள்ள டன் டனா எல்லை வாயில் சீனாவுக்கு பழங்கள் ஏற்றுமதி செய்வதற்கான வியட்நாமின் முக்கிய புள்ளியாக உள்ளபோதும் ஒரு நாளைக்கு 100 வாகனங்கள் மட்டுமே சுங்க அனுமதி பெறுகின்றன என்றும் தொற்றுக்கு முந்தைய நிலையுடன் ஒப்பிடும்போது மொத்த வாகனங்களில் இவை மூன்றில் ஒரு பங்கு மாத்திரமே என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அனுமதி தாமதத்தை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், எல்லை நெரிசல் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
வியட்நாமின் வடக்கு மாகாணமான லாங் சோனில் உள்ள சீனாவுடனான வியட்நாமின் எல்லை வாயில்களில் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் அனுமதி பெறுவதற்காக மணிக்கணக்கில் காத்திருந்ததாக விஎன் எக்ஸ்பிறஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு வியட்நாமின் மிகப்பெரிய பங்காளியாக சீனா இருந்த நிலையில், இருதரப்பு வர்த்தகம் 166 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியதுடன், வியட்நாம் அதன் இரண்டாவது பெரிய இறக்குமதி சந்தையான சீனாவுக்கு கடந்த ஆண்டு 56 பில்லியன் டொலர் மதிப்பிலான பொருட்களை ஏற்றுமதி செய்தது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago