2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பியோட்டம் : விசாரணையில் அதிர்ச்சி

Freelancer   / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு நீதவான் நீதிமன்றுக்குள் வைத்து கணேமுல்ல சஞ்சீவ கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சந்தேகநபரான, இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. 

குற்றப் புலனாய்வுத் துறையினர், இதனைக் கண்டறிந்துள்ளனர் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் அண்மையில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கெஹல்பத்தர பத்மே மற்றும் பிறரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் குறிவைத்து இலங்கை பொலிஸ் துறை, இந்தோனேசிய பொலிஸ் துறை மற்றும் சர்வதேச பொலிஸ் துறை (இன்டர்போல்) நடத்திய கூட்டு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த கைதுகள் அண்மையில் நடந்தன. 

இதேவேளை, கெஹல்பத்தர பத்மே, கொமாண்டோ சலிந்த மற்றும் பெக்கோ சமன் உள்ளிட்ட குழுவினர் தற்போது 72 மணி நேரத் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகின்றனர். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X