2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

மூதூர் மத்திய கல்லூரியில் தீ விபத்து;கற்றல் உபகரணங்கள் எரிந்து சாம்பல்

Simrith   / 2025 செப்டெம்பர் 01 , பி.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் இன்று திங்கட்கிழமை (01) பகல்  தீ பரவல் ஏற்பட்டு பாடசாலை உபகரணங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. குறித்த விபத்துச் சம்பவத்திற்கு மின் ஒழுக்கு காரணமாக இருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.

தீ பரவியதையடுத்து பொதுமக்கள், பிரதேச சபை ஊழியர்கள் , பாடசாலை ஆசிரியர்கள் இணைந்து நீரினைக் கொண்டு தீயை அணைத்து தீ பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.சுமார் அரை மணி நேர போராட்டத்தின் பின்னர் தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதன்போது மூதூர் மத்திய கல்லூரியின் களஞ்சியசாலையில் காணப்பட்ட கதிரை,மேசை,ஏனைய பெறுமதியான பல உபகரணங்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளன.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

எஸ்.கீதபொன்கலன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X