Janu / 2024 ஜூலை 31 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனுக்கும், பிரான்ஸ் விளையாட்டுத்துறை அமைச்சர் ஓடியா கெஸ்டெராவுக்கும் இடையே நடந்த முத்த பரிமாற்றத்தினால் பிரான்ஸ் சமூக ஊடகங்களில் வதந்தி உருவாக்கப்பட்டுள்ளது.
அண்மையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போது ஜனாதிபதி மக்ரோனுக்கும் ஓடியாவுக்கும் இடையிலான இந்த முத்த பரிமாற்றம் இடம் பெற்றுள்ளதுடன் இதன்போது பிரான்ஸ் பிரதமர் கேப்ரியல் அட்டலும் உடனிருந்துள்ளார் .
ஜனாதிபதி மக்ரோனின் உதடுகளில் மட்டுமல்ல, கழுத்திலும் முத்தம் கொடுத்த இந்த காட்சி கேமராவில் பதிவாகி பின்னர் சமூக வலைதளங்களில் பரவியுள்ளது . அதை பார்த்த பலரும் மக்ரோனை விமர்சித்துள்ளதுடன் காதலர்கள் மாத்திரமே அவ்வாறு முத்தமிடுவார்கள் என சுட்டிக் காட்டியுள்ளனர்.
மக்ரோன் மற்றும் ஆடியா காஸ்டெரா இருவரும் 46 வயதுடையவர்கள் என்பதுடன் மக்ரோன் தனது ஆசிரியரான 71 வயதுடைய பிரிட்ஜெட் ட்ரோக்னோவை திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

13 minute ago
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
55 minute ago
1 hours ago