2025 மே 19, திங்கட்கிழமை

ஜப்பானில் இலங்கையர் ஒருவர் மரணம்

Freelancer   / 2022 ஜூன் 08 , பி.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் - டோக்கியோவின் வடகிழக்கில் உள்ள Ibaraki ப்ரிபெக்சரில் 45 வயதுடைய இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பாண்டோ நகரில் உள்ள ஒரு வர்த்தக நிறுவனத்தில் தொழிலாளர்கள் சண்டையிடுவதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து அங்கு விரைந்த பொலிஸார், இலங்கையை சேர்ந்த மாலுதேன கெதர தர்மதாச உபுல் ரோஹன தர்மதாச என்பவரின் இடது தோளில் இருந்து இரத்தம் வடிந்துள்ளதை அவதானித்துள்ளனர்.

பின்னர் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், எனினும் அங்கு அவர் இறந்ததை வைத்தியர்கள் உறுதி செய்துள்ளனர்.

மேலும், சம்பவ இடத்தில் இரத்தக்கறை படிந்த கத்தியை பொலிஸார் கண்டுபிடித்தனர். சம்பவம் தொடர்பில் 29 வயது இளைஞன் உட்பட பலரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. (R)


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X