2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

ஜேர்மனி போராட்டத்தில் வன்முறை (படம்)

S.Renuka   / 2025 டிசெம்பர் 01 , பி.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜேர்மனியில் ஏ.எப்.டி., எனப்படும் 'ஜெர்மனிக்கான மாற்று' என்ற தீவிர வலதுசாரி அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள இளைஞர் அமைப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.

ஜேர்மனியில் முக்கிய எதிர்க்கட்சியாக ஏ.எப்.டி., செயல்பட்டு வருகிறது. இதன் இளைஞர் பிரிவான 'இளம் மாற்று' என்ற அமைப்பை, ஜேர்மனி உள்நாட்டு உளவு நிறுவனம் 'தீவிரவாதக்குழு'வாக வகைப்படுத்தியிருந்தது.

இதையடுத்து, அது கலைக்கப்பட்டு, 'ஜெர்மன் தலைமுறை' என்ற புதிய இளைஞர் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சிகள் மற்றும் தொழிலாளர்கள் அமைப்புகள் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது. அப்போது நகரின் முக்கிய பகுதிகளில் 30,000க்கும் மேற்பட்டோர் குவிந்துள்ளனர்.

இதைத் தடுக்க முயன்ற போலீசாருடன் போராட்டகாரர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 15 பொலிஸார் காயமடைந்ததாக கூறப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X