Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 31 , பி.ப. 12:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஏவுகணை அல்லது அணுவாயுதத் திட்டங்களை மீளுருக்வாக்கம் செய்ய ஆரம்பித்தால் ஈரான் மீதான இன்னொரு பாரிய தாக்குதலுக்கு ஐக்கிய அமெரிக்கா ஆதரவளிக்குமென ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் திங்கட்கிழமை (29) தெரிவித்துள்ளார்.
சந்திப்பையடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அருகிலிருக்கும்போதே இக்கருத்தை வெளிப்படுத்திய ஜனாதிபதி ட்ரம்ப், ஐ. அமெரிக்காவின் ஜூன் தாக்குதலையடுத்து ஆயுதத் திட்டங்களை மீளுருவாக்குவதற்காக ஈரான் பணியாற்றலாமெனக் கூறியுள்ளார்.
தாங்கள் சேதமாக்கிய தளங்களில்லாமல் வேறு இடங்களில் அவர்கள் ஆயுதங்களையும் மற்றைய விடயங்களையும் கட்டியெழுப்புவதாக தான் வாசித்ததாக ஜனாதிபதி ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தங்களுக்கு அவர்கள் எங்கே செல்கிறார்கள், என்ன செய்கிறார்களென சரியாகத் தெரியுமென்ற ஜனாதிபதி ட்ரப், அவர்கள் செய்ய மாட்டார்களெண தான் நம்புவதாகவும் ஏனெனில் முன்னைய தாக்குதலுக்கு பயன்படுத்திய பி-2 விமானத்தின் எரிபொருளை வீணாக்க விரும்பவில்லையென்றும் இது 37 மணித்தியால இருவழிப் பயணமெனக் கூறியுள்ளார்.
21 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago