Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 10 , பி.ப. 03:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாய்ப்பாலில் மைக்ரோ-பிளாஸ்டிக் கூறுகள் இருப்பதை இத்தாலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் குழு முதன்முறையாக கண்டுபிடித்துள்ளது.
இத்தாலியில் உள்ள 34 ஆரோக்கியமான தாய்மார்களிடம் இருந்து எடுக்கப்பட்ட தாய்ப்பாலின் மாதிரிகளைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனைகளில் இது தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
தாய்ப்பாலில் மைக்ரோ பிளாஸ்டிக்குகள் இருப்பதை உறுதி செய்வதன் மூலம் மனித உடலிலும் பிளாஸ்டிக் நச்சுகள் கலந்திருப்பது தெரியவருவதாக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
05 மில்லிமீற்றருக்கும் குறைவான நீளமுள்ள பிளாஸ்டிக் துகள்கள் மைக்ரோ பிளாஸ்டிக் எனப்படும் அந்த வகையில், "மனித உடலில் பிளாஸ்டிக் நச்சுகளை சந்திப்பது ஒரு பயங்கரமான சூழ்நிலை, அவை செல்களை பாதிப்படையச் செய்வதுடன், புற்றுநோயை ஏற்படுத்துகின்றன.
தாய்ப்பாலில் பிளாஸ்டிக் நச்சுகள் கலந்திருப்பது ஒரு பயங்கரமான நிலை என ” இந்தப் பரிசோதனையை நடத்திய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago