2026 ஏப்ரல் 15, புதன்கிழமை

’நாங்கள் முயன்றோம்; முடிவு ஈரான் வசம்’

Freelancer   / 2026 ஏப்ரல் 15 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை குறித்து அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் வெளிப்படையாக பேசியுள்ளார்.

கடந்த வாரம் அமெரிக்கா - ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை அன்று பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கியது. சுமார் 21 மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது. இருப்பினும் இதில் சுமூக முடிவு எட்டப்படவில்லை. பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் ஜே.டி.வான்ஸ் கருத்து வெளியிடுகையில்,

அமைதிப் பேச்சுவார்த்தையின் இறுதியில் அதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்றாலும் நல்ல முன்னேற்றம் கண்டோம். இரண்டு தரப்பும் ஒற்றை புள்ளியை நோக்கி நகர்ந்தோம். இருப்பினும் அதில் ஈரானின் நகர்வு போதுமானதாக இல்லை. இப்போது முடிவு ஈரான் வசம் உள்ளது.

ஈரானின் அணுசக்தி செயல்பாடு சார்ந்து அமெரிக்காவின் முன்மொழிவை பூர்த்தி செய்வது இரு நாடுகளுக்கும் சிறந்ததொரு ஒப்பந்தத்துக்கு வழிவகுக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். (a)  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .