Freelancer / 2026 ஜனவரி 06 , மு.ப. 07:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெனிசுலா நாட்டின் ஜனாதிபதியாக இருந்த மதுரோ கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் நியூயோர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது தன் மீதான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்த மதுரோ, தான் ஒரு நிரபராதி என்று தெரிவித்தார். மேலும், ஜனாதிபதியாக இருந்த தன்னை சிறைபிடித்துவிட்டனர் எனவும் கூறினார்.
வெனிசுலாவில் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சி செய்தவர் மதுரோ.. அமெரிக்காவுக்குப் போதைப் பொருளை வர மதுரோ தான் காரணம் என டிரம்ப் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். இந்தச் சூழலில் தான் அமெரிக்கப் படைகள் கடந்த சனிக்கிழமை அவரை கைது செய்தது. மேலும், மதுரோ அமெரிக்காவுக்கு நாடுகடத்தப்பட்டார். அமெரிக்கா சிறைகளில் அடைக்கப்பட்டார்.
சனிக்கிழமை அவர் கைது செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை அவர் நியூயோர்க் வளாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ட்ரம்ப் அரசு அவர் மீது போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், அது தொடர்பான வழக்குகள் நடைபெற்றது.. இலங்கை நேரப்படி திங்கள்கிழமை நள்ளிரவில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
நியூயோர்க் நீதிபதி முன்பு ஆஜரான நிக்கோலஸ் மதுரோ, தனது கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தன்னை வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி என்று அறிமுகப்படுத்திக் கொண்ட மதுரோ, தன் மீது அமெரிக்க அரசு சுமத்திய போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும் தான் நிரபராதி என்றும் கூறினார்.
நீதிமன்றத்தில் ஸ்பானிஷ் மொழியில் பேசிய மதுரோ, "என்னைச் சிறை பிடித்துவிட்டனர். நான் வெனிசுலா ஜனாதிபதி" என்று குறிப்பிட்டார். பின் வழக்கு விசாரணையின்போது குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த மதுரோ, "நான் நிரபராதி. நான் குற்றவாளி அல்ல. நான் ஒரு கண்ணியமான மனிதன். என் நாட்டின் ஜனாதிபதி" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார். (a)

2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago