Ilango Bharathy / 2022 மே 24 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}

பிரித்தானியாவில் நாய்களுக்கான உணவுகளைத் தயாரித்து வரும் நிறுவனமொன்று தாம் தயாரிக்கும் உணவினை 5 நாட்கள் சாப்பிடும் நபருக்கு இலங்கை மதிப்பில் சுமார் 23 லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
லண்டனின் செயற்பட்டு வரும் ஆம்னி என்ற தாவரங்களைப் பயன்படுத்தி நாய்களுக்காக உணவுகளைத் தயாரித்து வரும் நிறுவனமே குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது குறித்து அந்நிறுவனம் மேலும் தெரிவிக்கையில்” நாம் தயாரிக்கும் உணவுப் பொருட்களில் இனிப்பு உருளை கிழங்குகள், பருப்புகள், பூசணிக்காய் போன்ற காய்களும், புளூபெர்ரி, கிரான்பெர்ரி போன்ற கனிகளும் மற்றும் பட்டாணி, பழுப்பு அரிசி போன்றவையும் கலந்திருக்கும்.இவ் வேலைக்குத் தெரிவு செய்யப்படும் நபருக்கு என்று தனித்தகுதிகள் எதுவும் தேவையில்லை.
எனினும், இவ் உணவை உட்கொண்டால் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என இந்த வேலைக்கு வருவோர் உறுதி செய்ய வேண்டும்.
ஒருவேளை ஒவ்வாமை ஏற்பட்டால் அதுபற்றிய விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்.
இதன்படி, 5 நாட்களுக்கு நாய் உணவை சாப்பிட வேண்டும். அதன்பின்னர், அவரது அனுபவம், உணவின் சுவை மற்றும் சவாலை எதிர்கொள்ளும்போது ஏற்படும் ஆற்றல் அளவு, மனநிலை மற்றும் வயிற்றில் உணவின் இயக்கம் உள்ளிட்டவற்றை எப்படி உணர்ந்தீர்கள்? என்பது பற்றிய விவரங்களை நிறுவனத்திற்கு அளிக்க வேண்டும்.
மேலும் பிரித்தானியராகவும் 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருப்பது அவசியம் எனவும் தெரிவித்து உள்ளது.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025