Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Renuka / 2025 ஓகஸ்ட் 20 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆப்கானிஸ்தானில் புலம் பெயர்ந்தவர்களை ஏற்றி சென்ற பஸ் ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 71 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர் என அந்த மாகாண அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் மேற்கு ஹெராத் மாகாணத்தில் ஒரு பயணிகள் பஸ் புலம் பெயர்ந்தோரை ஏற்றி சென்று கொண்டிருந்தது. அப்போது, ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த பஸ் ஒரு லொறி மற்றும் பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 17 குழந்தைகள் உட்பட 71 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
ஈரான் அகதிகளை ஏற்றிக் கொண்டு காபூல் நகரை நோக்கி பஸ் சென்ற போது, இந்த விபத்து நிகழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் 71 பேர் உயிரிழந்தனர் என்பதை ஆப்கானிஸ்தான் மாகாண அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த விபத்து சமீபத்திய வரலாற்றில் மிகவும் மோசமான போக்குவரத்து பேரழிவுகளில் ஒன்றாகும் என மாகாண அரசாங்க செய்தி தொடர்பாளர் அஹ்மதுல்லா முத்தகி தெரிவித்துள்ளார்.
12 minute ago
20 minute ago
28 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
28 minute ago
1 hours ago