Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஜூலை 18 , பி.ப. 06:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த சில நாட்களுக்கு முன்னர், ஹைதராபாத்தில் உள்ள ஹோட்டலில் சிந்தி இளைஞர் பிலால் காக்கா ஆப்கானியர்களால் கொல்லப்பட்டமை பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள சட்டவிரோத ஆப்கானியர்கள் விவகாரத்தை எழுப்பியுள்ளது.
ஹைதராபாத் நெடுஞ்சாலைக்கு அருகேவாது வா அருகே உள்ள சுப்பர் சலாதீன் ஹோட்டலில் உணவு கட்டணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில், ஹோட்டல் உரிமையாளர்கள் பிலால் காக்காவை சுட்டுக் கொன்றதாகவும், அவரது இரு நண்பர்களைக் காயப்படுத்தியதாகவும் உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
சட்டவிரோத ஆப்கானிஸ்தான் குடியிருப்பாளர்கள் போதைப்பொருள் மற்றும் அதிக வட்டி வீதத்தில் பணத்தை கடனுக்கு வழங்குவதில் ஈடுபட்டுள்ளனர். சிந்தி இளைஞர்களைக் கொன்றதில் அவர்களுக்கும் தொடர்பு இருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் அதிகாரிகள் மற்றும் சட்ட அமுலாக்கத் திணைக்களத்தில் உள்ள ஏனையவர்கள் இவ்வாறானவர்களுக்கு எதிராக செயற்படுவதில்லை என உள்ளூர் ஊடகங்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளன.
பலால் காக்காவின் வழக்கு ஒரு தனிமைப்படுத்தப்பட்ட வழக்கு மட்டுமல்ல, இது சிந்துவுக்கு வெளியாட்களின் வருகையின் விளைவு என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
சிந்துவில் வெளியாட்களின் ஊடுருவலைத் தடுக்க அமைதியான அரசியல் இயக்கங்கள்தான் ஒரே வழி என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, சிந்துவில் வாழும் ஆப்கானியர்கள் மற்றும் பிற இடங்களில் இருந்து சிந்துவுக்கு வருவோரால், சிந்துவில் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை அதிகரித்து வருகிறது என்று சிந்து ஐக்கியக் கட்சியின் தலைவரும், சிந்து நடவடிக்கைக் குழுவின் அழைப்பாளருமான சையத் ஜலால் மெஹ்மூத் ஷா கூறியுள்ளார்.
பலால் காக்கா கொல்லப்பட்டதைக் கண்டித்து நூற்றுக்கணக்கான காக்கா பழங்குடியினர் சிந்து மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago