Ilango Bharathy / 2022 நவம்பர் 13 , மு.ப. 09:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்று வரும் சர்வதேச இறக்குமதி கண்காட்சியில், பல பணிகளை ஒரே நேரத்தில் செய்யும் ஆற்றல் படைத்த மல்டி-டாஸ்கிங் ரோபோக்கள் பணியமர்த்தப்பட்டுள்ளன.
இவ்ரோபோக்கள் ”பார்வையாளர்களை அவர்கள் விரும்பும் அரங்கிற்கு வழிநடத்தி செல்வது, முகக்கவசம் அணியாதவர்கள், தனிமனித இடைவெளி கடைபிடிக்காதவர்களை கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றும்படி வலியுறுத்துவது, அரங்கில் வீசப்படும் குப்பைகளை அப்புறப்படுத்துவது, கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்துவது உட்பட பல பணிகளை மேற்கொண்டுவருகின்றன.

மேலும் அங்குள்ள 46 ரோபோக்களும் ஒன்றோடொன்று தகவல் பரிமாறிக்கொள்ளும் வகையில் புரோகிராம் செய்யப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
31 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
1 hours ago
3 hours ago