Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Ilango Bharathy / 2023 ஜனவரி 26 , பி.ப. 04:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரதமரின் முன்னிலையில் நபரொருவர் திடீரென தன் மீது டீசலை ஊற்றித் தீக்குளித்த சம்பவம் நேபாளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தில் கடந்த டிசம்பர் மாதம் சிபிஎன்-மாவோயிஸ்ட் என்ற கட்சியியைச் சேர்ந்த புஷ்ப கமல் தாஹால் ( Pushpa Kamal Dahal) பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், இவர் நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்திலிருந்து வெளியே வந்த சமயத்தில், நபர் ஒருவர் திடீரென தன் மீது டீசலை ஊற்றி நெருப்பு வைத்தார். இதனைத்தொடர்ந்து பிரதமர் உடனடியாக அந்த பகுதியில் இருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.
அதேசமயம் குறித்த நபரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அந்நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில்,உயிரிழந்த நபர் 37 வயதுடைய பிரேம் பிரசாத் ஆச்சார்யா எனத் தெரிய வந்துள்ளது. எனினும் அவர் தீக்குளித்தமைக்கான காரணம் என்ன என்பது குறித்த தகவல் வெியாகவில்லை இந்நிலையில் இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago