Freelancer / 2025 டிசெம்பர் 31 , மு.ப. 07:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் இல்லம் மீது உக்ரைன் படைகள் ட்ரோன் தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் நிலையில், அது குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.
போரை முடிவுக்குக் கொண்டு வர தூதரக முயற்சிகளை தொடருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
ரஷ்ய ஜனாதிபதியின் இல்லம் குறிவைக்கப்பட்டதாக வரும் செய்திகள் குறித்து நான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளேன். பகைமையை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை அடைய தற்போதைய தூதரக முயற்சிகளே மிகவும் சாத்தியமான வழி. எனவே, சம்பந்தப்பட்ட அனைவரும் இந்த முயற்சிகளில் கவனம் செலுத்துமாறும் அவற்றை பலவீனப்படுத்தும் எந்த ஒரு நடவடிக்கையையும் தவிர்க்குமாறும் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார். (a)
21 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago