Editorial / 2019 ஓகஸ்ட் 04 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள இரவு விடுதியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இரவு விடுதியில் மர்ம நபர் ஒருவர் திடீரென நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.
இந்த தாக்குதலில் 9 பேர் பரிதாபமாக பலியானதுடன், மேலும் 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது துப்பாக்கிச்சூடு இதுவாகும்.
முன்னதாக, டெக்சாஸ் மாகாணத்தில் வால்மார்ட் வணிக வளாகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 20 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago