Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Freelancer / 2025 பெப்ரவரி 03 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் அருகே உள்ள பவுபேமாண்ட் நகரில் உள்ள முதியோர் காப்பகத்தில், சனிக்கிழமை (1) இடம்பெற்ற தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த காப்பகத்தில் உள்ள சலவை அறையில் ஏற்பட்ட தீ ஏனைய பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. தீப்பற்றிய மூன்றாவது தளம் முழுவதும் புகை மண்டலமானது.
இதனால் காப்பகத்தில் இருந்து வயோதிபர்கள் வெளியேற்றப்பட்டனர். அவர்களில் சிலர் புகையை சுவாசித்ததால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு,. வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர்.
இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மூச்சுத்திணறல் காரணமாக அவர்கள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 பேர் காயமடைந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
01 May 2025