Freelancer / 2025 ஜூன் 01 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஷ்யாவின் பிர்யங்ஸ் மாகாணம் கில்முவ் நகரில் இருந்து தலைநகர் மாஸ்கோவுக்கு, சனிக்கிழமை (31) இரவு சென்ற ரயில் ஒன்று விபத்துக்குள்ளானதில், 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிர்யங்ஸ் மாகாணம் யொஹொனிசி என்ற கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது தண்டவாளத்தின் மேல் அமைக்கப்பட்டிருந்த மேம்பாலம் இடிந்து விழுந்தது. அந்த மேம்பாலத்தின் இடிபாடுகள், கான்கிரீட் கற்கள் தண்டவாளத்தில் விழுந்தன. குண்டு வைத்து மேம்பாலம் தகர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது, அந்த தண்டவாளத்தில் வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் இடிபாடுகள், கான்கிரீட் கற்கள் மீது மோதியது. இதில் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ரயிலில் பயணித்த 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 30 பேர் படுகாயமடைந்தனர்.
மேம்பாலம் குண்டு வைத்து தகர்கப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது சதிச்செயலாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
விபத்து நடந்த பகுதி உக்ரைனுக்கு அருகே உள்ள பகுதியாகும். இதனால், இந்த சம்பவத்தில் உக்ரைன் சதிச்செயல் இருக்கலாம் என்று ரஷ்ய அதிகாரிகள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
8 minute ago
14 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
24 minute ago