Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Freelancer / 2022 ஜூன் 08 , பி.ப. 05:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
3.50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் திடீரென வேலையை விட்டு வெளியேறியதும், அதற்கான காரணத்தை அவர் கூறியதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இன்றைய காலத்தில் வேலை கிடைப்பதே கடினம் என்ற நிலையில், அதுவும் கோடிக்கணக்கில் சம்பளம் கிடைக்கும் வேலை என்பது மிகமிக கடினம் என்ற நிலையில், நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வேலை செய்த சீனாவை சேர்ந்த மைக்கேல் லின் என்பவர் ஆண்டுக்கு இந்திய மதிப்பில் 3.50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வந்தார்.
இந்த நிலையில், திடீரென அவர் தனக்கு நெட்பிளிக்ஸ் வேலை பிடிக்கவில்லை என கூறி விலகிவிட்டார். இந்த வேலையில் இலவசமாக உணவு, அதிக சம்பளம் மற்றும் அதிக விடுமுறை கிடைத்தது என்றும், ஆனால் இந்த வேலை எனக்கு போரடித்து விட்டதால் வேலையை விட்டு நின்று விட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அவரது இந்த முடிவு அவரது பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் சேர்ந்த லின், அதற்கு முன் அமேசானில் பணிபுரிந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு காலத்தில் வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டிய நிலை இருந்தபோது, தனது வேலையில் சலிப்பு ஏற்பட தொடங்கி விட்டதாகவும், ஆரம்பகாலத்தில் பணியில் நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டு, அதற்காக சம்பளம் நிறைய தரப்பட்டாலும் தன்னால் புதிதாக எதையும் கற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையை இருந்ததாகவும், அதனால் வேலையில் இருந்து விலகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தான் சொந்த தொழிலில் ஈடுபட இருப்பதாகவும், இதில் முழு ஈடுபாட்டுடன் வேலை செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தனக்கு சொந்த தொழிலில் தகுந்த வருமானம் எதுவும் வரவில்லை என்றாலும் உற்சாகமளிக்கும் வேலையை செய்ய வேண்டும் என்பதே தனது குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த முடிவு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
1 hours ago
2 hours ago
4 hours ago