Editorial / 2025 ஒக்டோபர் 17 , பி.ப. 12:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

வங்கதேச சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் தலைமை வழக்கறிஞர், பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு (Sheikh Hasina) மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
“அனைத்து குற்றங்களுக்கும் மூளையாக ஷேக் ஹசீனா இருந்துள்ளார். அவர் ஒரு இதயமற்ற குற்றவாளி. அவர் அதிகபட்ச தண்டனைக்கு தகுதியானவர். மரண தண்டனை தொடர்பாக அவருக்கு எந்த கருணையும் காட்டப்படக்கூடாது” என்று தலைமை வழக்கறிஞர் முகமது தாஜுல் இஸ்லாம் (Mohammad Tajul Islam) குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எதிர்காலத்தில் யாரும் தங்கள் சொந்த நாட்டின் குடிமக்களை அரசியலை பயன்படுத்தி கொல்ல கூடாது என்பதற்காக, நியாயமான நீதியை நிலைநாட்ட அதிகபட்ச தண்டனையை விதிப்பது பொருத்தமானது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த போராட்டங்களின் போது மாணவர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர்.
29 minute ago
34 minute ago
43 minute ago
02 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
34 minute ago
43 minute ago
02 Dec 2025