Freelancer / 2026 ஏப்ரல் 04 , மு.ப. 09:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையை வெற்றிகரமாகக் கடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதல்களுக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. மேலும், சர்வதேச எண்ணெய் விநியோகத்தின் முக்கிய வழிப்பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவர்களின் கூட்டாளிகளுக்குச் சொந்தமான கப்பல்களுக்கு ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்ல அனுமதியில்லை எனவும், அனுமதியின்றி செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் எனவும் ஈரான் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில், மால்டா நாட்டின் கொடியுடன் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சி.எம்.ஏ. சி.ஜி.எம். எனும் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்கு கப்பல் ஒன்று நேற்று ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து ஓமன் நாட்டுக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், போர் தொடங்கியது முதல் ஹோர்முஸ் நீரிணையை பிரான்ஸ் நாட்டுடன் தொடர்புடைய சரக்கு கப்பல் ஒன்று முதல்முறையாகக் கடந்துள்ளது.
இருப்பினும், இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு கருத்தும் வெளியாகவில்லை எனக் கூறப்படுகிறது. R
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago