Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Shanmugan Murugavel / 2016 மார்ச் 28 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
திபெத்தைச் சேர்ந்த பௌத்த தலைவரான தலாய் லாமா, பௌத்த மதத்தைக் கேலிக்குள்ளாக்குவதாக, சீனா தெரிவித்துள்ளது. மறு அவதாரம் தொடர்பாக நம்பிக்கையின்மையை வெளிப்படுத்துவதற்காகவே, அவர் மீது இவ்வாறு குற்றச்சாட்டை, சீனா வெளிப்படுத்தியுள்ளது.
சீன ஆட்சிக்கெதிராக, 1959ஆம் ஆண்டில் திபெத்தில் ஏற்படுத்தப்பட்ட புரட்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள தலாய் லாமா, வன்முறையைத் தூண்டுவதாக, சீனா குற்றஞ்சாட்டி வருகிறது. எனினும், அதனை அவர் மறுத்து வருகிறார்.
தலாய் லாமா மரணிக்கும் போது, அவரது ஆவி, இன்னொரு குழந்தையின் உடலுக்குள் புகுவதாக, திபெத்தின் பௌத்தம் தெரிவிக்கிறது. மறுபுறத்தில் சீனாவோ, அடுத்த லாமாவை நியமிக்கும் உரிமை, தமக்கு உள்ளது எனத் தெரிவித்து வருகிறது. தலாய் லாமாவோ, இந்தப் பட்டம், தனது இறப்புடன் முடிவடையலாம் என்றவாறான கருத்துகளையும் வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள, சீன ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கும் இன மற்றும் சமய விவகாரச் செயற்குழுவின் தலைவரான ஸூவெய்குன், 'வெளிநாட்டவரொருவராகவோ, தேனீயாகவோ அல்லது குழப்படி செய்யும் பெண்ணாகவோ அவதாரம் எடுக்கலாம் எனத் தெரிவித்து வருவதோடு, வாழும் மறு அவதாரமோ அல்லது மறு அவதாரம் இல்லாது போகவோ வாய்ப்புகளுள்ளதாகவும் தெரிவித்து வருகிறார். இது, திபெத்திய பௌதத்தைக் கேலிக்குள்ளாக்குவதாகும்" என அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago