Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 நவம்பர் 24 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்காட்லாந்தின் எடின்பர்க் நகரில் வசித்து வருபவர் எலிட் ஸ்டிம்ப்சன்.
இவர் அண்மையில் தனது வீட்டில் பிளம்பிங் வேலை செய்வதற்காக சிலரை அழைத்துள்ளார். அவர்கள் அவ்வீட்டின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தரையில் போடப்பட்டிருந்த பலகைகளைப் பெயர்த்து எடுத்துள்ளனர்.
அங்கே பழைய விஸ்கி போத்தல் ஒன்று கிடைத்துள்ளது. இதை வீட்டின் உரிமையாளரிடம் அவர்கள் கொடுத்துள்ளார். முதலில் ஆச்சரியப்பட்ட எலிட் பின்னர் அதனுள் இருக்கும் கடிதத்தை கவனித்துள்ளார்.
அக்கடிதம் முன்னாள் பிரிட்டிஷ் அரசி விக்டோரியாவின் காலத்தில் அதாவது 1887ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 6 ஆம் திகதி இரு கட்டிட பணியாளர்களால் எழுதப்பட்டது என்று கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் குறித்த கடிதத்தில் ”ஜேம்ஸ் ரிச்சி மற்றும் ஜான் க்ரீவ் ஆகிய இருவர் இந்த தளத்தை அமைத்தனர். ஆனால் இந்த விஸ்கியை அவர்கள் அருந்தவில்லை” என தெரிவித்துள்ளனர் .
பிபிசி ஸ்காட்லாந்தின் அறிக்கையின்படி, அந்த காலத்தில் வீட்டில் பணிபுரியும் பெண்களின் அறையாக இது இருந்திருக்கலாம் எனவும், அப்போது இக் கடிதம் இங்கு வைக்கப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.
9 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
2 hours ago
2 hours ago