Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2022 நவம்பர் 10 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எதிர்வரும் 15ஆம் திகதி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போவதாக முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
2016 முதல் 2020 ஆம் வருடம் வரை நான்கு வருடங்கள் அமெரிக்காவின் ஜனாதிபதியாக இருந்தவர் டெனால்டு ட்ரம்ப்.
இவரது ஆட்சி காலத்தில் வடகொரியா உடன் நட்பு, இஸ்ரேல் அரபு நாடுகள் இடையேயான நட்பை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு குறிப்பிடத்தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
அதே சமயம் 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் அத்தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்ததால் புதியஜனாதிபதியாக ஜோபைடன் தெரிவுசெய்யப்பட்டார்.
இச் சூழலில் அந்த நாட்டின் ஓஹியோ மாகாணத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் நேற்றைய தினம் பேசிய ட்ரம்ப் ”நான் வரும் 15ஆம் திகதி ஃப்ளோரிடா மார்-ஏ-லகோவில் வைத்து மிகப்பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடப் போகிறேன்” என தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் 2024 ஆம் வருடம் நடைபெறவுள்ள நிலையில்? அவர் போட்டியிடப் போவது பற்றி ஏதேனும் தகவலை தெரிவிப்பாரா அல்லது டுவிட்டர் நிறுவனத்தை எலோன் மஸ்க் கைப்பற்றியுள்ள நிலையில் தான் மீண்டும் டுவிட்டரில் இணைவது பற்றி ஏதேனும் அறிவிப்பு வெளியிடுவாரா என்ற பல்வேறு விதமான கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago