Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஜூலை 01 , மு.ப. 11:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டாம் உலகப் போரின்போது ஹிட்லர் தலைமையிலான நாசி படைகள் ,ஜேர்மனியின் தலைநகர் பெர்லினுக்கு அருகே வதை முகாம் அமைத்து 2 லட்சத்திற்கும் அதிகமான கைதிகளை அடைத்து வைத்திருந்தனர்.
அவர்களில் பல்லாயிரக்கணக்கான கைதிகள் பட்டினி, நோய், கட்டாய உழைப்பு மற்றும் பிற காரணங்களால் உயிரிழந்துள்ளனர்.
மேலும் ஆயிரக்கணக்கான கைதிகள், துப்பாக்கி சூடு, தூக்கில் போடுதல் மற்றும் விஷ வாயுவைச் சுவாசிக்க வைத்தால் போன்ற தண்டனைகள் மூலம் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் நாசி கால குற்றவாளிகள் மீது விசாரணை மேற்கொண்டு வரும் தற்போதைய ஜேர்மனி அரசு, நாசி வதை முகாமில் காவலராக பணியாற்றிய 101 வயது முதியவருக்கு எதிராக கடந்த வருடம் விசாரணையொன்றைத் தொடங்கியது.
இதன்போது குறித்த முதியவர் மீது ‘3,518 பேரைக் கொலை செய்ய உதவி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு‘ விசாரணை எதிர்கொண்டு வந்தார்.
இந் நிலையில் இந்த வழக்கில் பெயர் விவரங்கள் வெளியிடப்படாத அந்த முதியவருக்கு ஐந்து வருடங்கள் சிறை தண்டனை விதித்து ஜேர்மனி நீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago