Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஜூலை 02 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், 8 வயதுச் சிறுவன் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 1 வயதான பெண்குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் பல குற்றவழக்குகளில் தொடர்புடைய ரோடரிக் ராண்டால் (Roderick Randall) என்ற நபர் தனது மகன், தோழி, தோழியின் மூன்று கை குழந்தைகளுடன் விடுதி ஒன்றில் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் ராண்டால் வெளியே சென்ற போது அவரது அலுமாரியில் இருந்த துப்பாக்கியை எடுத்து விளையாடியுள்ளதாகவும், இதன் போது எதிர்பாராத விதமாக ராண்டாலின் தோழியின் ஒரு வயது பெண் குழந்தையின் உடலை துளைத்து வெளியே வந்த குண்டு மற்றொரு குழந்தையின் மீதும் பாய்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒரு வயது பெண் குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பி ஓடிய ராண்டலை, சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தமை, கவனக்குறைவாக செயல்பட்டமை உள்ளிட்ட காரணங்களுக்காக பொலிஸார் கைது செய்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago