2021 ஜூன் 22, செவ்வாய்க்கிழமை

பாடசாலை விளையாட்டு விழா நாளை

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் நாளை மறுதினம் சனிக்கிழமை ஆரம்பமாகின்றது.

இவை கொழும்பு, நீர்கொழும்பு, அநுராதபுரம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளன. தொடர்ந்து மூன்று தினங்கள் இப்போட்டிகள் நடைபெறும். இதன் இரண்டாம் கட்டம் 18 ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை நடைபெறும்.
 
பதினோராம் திகதி  ஆரம்பமாகும் முதலாம் கட்ட போட்டியில் வலைப்பந்து  சதுரங்கம், ஜீடோ, குத்துச் சண்டை, உடற்பயிற்சி போட்டி, கால்பந்து, கராத்தே, மேசைப்பந்து, பட்மின்ரன், எல்லே, அரை மரதன், சைக்கிள் ஓட்டம் ஆகிய போட்டிகள் நடைபெறும்.
 
பதினெட்டாம் திகதி ஆரம்பமாகும் இரண்டாம் கட்ட போட்டியில் கரப்பந்து, ஹொக்கி, மென்பந்து கிரிக்கெட், மல்யுத்தம், கபடி, கூடைப்பந்து, கரம் ஆகிய போட்டிகள் நடத்தப்படும்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .