2021 ஜூலை 29, வியாழக்கிழமை

அம்பாறை கால்பந்தாட்ட சங்கத்தின் தேர்தல் நாளை

Kogilavani   / 2011 ஏப்ரல் 02 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் அம்பாறை மாவட்ட கால்பந்தாட்ட சங்கத்தின் புதிய நிருவாகத்தை தெரிவு செய்வதற்கான  தேர்தல்  நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

கல்முனை மாவட்ட நீதிமன்ற தீர்ப்பையடுத்தே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.  

சங்கத்தின் தலைவர் மற்றும் செயளாலர்களுக்கு எதிராக மருதமுனை கிங்ஸ் இலவன் கழகத்தின் தவிசாளர் ஸ்ட்.ஏ.எச்.றஹ்மான் கல்முனை மாவட்ட நீதிமன்றத்தில் செய்த வழக்குத்தாக்கலினால் இச்சங்கத்தின் பொதுத் தேர்தல் நடத்த இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட கல்முனை மாவட்ட நீதிமன்றத்தின் நீதவான் எம்.இளஞ்செழியன் வழக்குத் தொடுக்கப்பட்டவரின் குற்றச்சாட்டிற்கு எதுவித போதிய ஆதாரமும் இல்லை எனத் தெரிவித்தார்.

இதனால் இவ்வழக்கின் மூலம்  நீதி மன்றத்தின் காலத்தையும் நேரத்தையும் வீணடித்ததைக் கண்டித்ததுடன் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளருக்கு தலா ஐயாயிரம் ரூபா பணமும் செலுத்துமாறும் தீர்ப்பளித்து சங்கத்;தின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .