Freelancer / 2023 செப்டெம்பர் 24 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
நூருல் ஹுதா உமர்
மருதமுனை மனாரியன் 88 அமைப்பின் ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் "மருதமுனை இளைஞர் விளையாட்டு கழகங்களுக்கு உதவுவோம்" எனும் நோக்குடன் மருதமுனையிலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படுகின்ற நிகழ்வு மனாரியன் 88 அமைப்பின் பிரதான செயற்பாட்டாளர் ஐ.எல். முக்த்தார் அவர்களினால் முன்னெடுக்கப்படுகின்றன.

இது தொடர்பாக மருதமுனை எவரெடி விளையாட்டுக் கழகத்துடனான கலந்துரையாடல் பர்வின் ரெடிங் மற்றும் லதான் அக்ரோ இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களின் நிறைவேற்று பணிப்பாளர் கலீல் முஸ்தபாவுடன் அண்மையில் நடைபெற்றது.
இதன்போது மருதமுனை எவரெடி விளையாட்டுக்கழக கட்டமைப்பு, முன்னேற்றம் மற்றும் எதிர்கால அபிவிருத்திகள் என்பன போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டன. மேலும், இந்நிகழ்வில் எவரெடி விளையாட்டுக்கழக வளர்ச்சிக்கு உதவும் நோக்குடன் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
பெறுமதியான விளையாட்டு உபகரணங்களை எவரெடி விளையாட்டுக் கழகத்துக்கு வழங்கி உதவிய தொழிலதிபர் கலீல் முஸ்தபா மற்றும் மனாரியன் 88 பிரதான செயற்பாட்டாளர் ஐ.எல்.முக்தார் ஆகியோருக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் எவரடி விளையாட்டு கழகச் செயலாளர் தெரிவித்தார்.
9 minute ago
23 minute ago
33 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
23 minute ago
33 minute ago
36 minute ago