Janu / 2024 மே 08 , பி.ப. 03:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
நுவரெலியா, வலப்பனை பிரதேசத்திற்கு உட்பட்ட உடப்புஸ்ஸல்லாவ டலோஸ் தோட்டத்தில், கரப்பந்தாட்ட பயிற்சி மத்திய நிலையம் புதன்கிழமை (08) காலை திறந்து வைக்கப்பட்டது.
மத்திய மாகாணத்தில் பிரசித்தி பெற்ற சிறந்த கரப்பந்தாட்ட வீரரான அமரர்.நாகலிங்கம் கமலேஸ்வரனின் ஞாபகார்த்தமாக "கமலேஸ் கரப்பந்தாட்ட மத்திய பயிற்சி நிலையம்"என இந்த நிலையத்துக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமரர் நா.கமலேஸ்வரனின் புதல்வர் கமலேஸ்வரன் கணிஷ்நுவான் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய கரப்பந்தாட்ட முன்னாள் தலைவர் எஸ்.சி.ஏக்கநாயக்க,வலப்பனை பிரதேச விளையாட்டு துறை அதிகாரி சாயா மதுவந்தி,
நுவரெலியா மாவட்ட கரப்பந்தாட்ட வீரர்களின் மூத்த பயிற்றுவிப்பாளர் குலஸ்ரீ சமரசிங்க,ஏபர்நெட் லங்கா ஆடை தொழிற்சாலை முகாமையாளர் சுதத் நாகஸ்தன்ன உள்ளிட்ட அதிபர்கள்,அரசியல் பிரமுகர்கள்,வர்த்தகர்கள் தோட்ட பொது மக்கள்,கரப்பந்தாட்ட வீரர், வீராங்கனைகள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆ.ரமேஸ்


6 hours ago
8 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 Nov 2025