Shanmugan Murugavel / 2025 செப்டெம்பர் 21 , பி.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
- வி.ரி. சகாதேவராஜா

தேசிய கராத்தே போட்டிகளில் சாதனை படைத்த திருக்கோவில் வலய ஆலையடிவேம்பு ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை மாணவர் வியாழக்கிழமை (18) பெரும் வரவேற்புடன் கெளரவிக்கப்பட்டனர்.
பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட கராத்தே போட்டி பண்டாரகம உள்ளக விளையாட்டு அரங்கில் நடைபெற்றபோது ஸ்ரீ இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை மாணவர் 3 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளிப் பதக்கங்கள், 2 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக மொத்தம் 7 பதக்கங்களைப் பெற்றிருந்தனர் .
இதில் அணி காட்டாவில் பங்குபற்றிய எஸ். கிவோன்ஷ்டன், கே. தரனிஷ், எஸ். நவக்சன் ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், 16 வயது ஆண்களுக்கான காட்டா பிரிவில் எஸ். கிவோன்ஷ்டன் தங்கப் பதக்கத்தையும், கே. தரனிஷ் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனர். 20 வயதுப் பெண்களுக்கான காட்டா பிரிவில் ரி. நிதுர்சிகா வெள்ளிப் பதக்கத்தையும், 20 வயது ஆண்களுக்கானா காட்டா, குமித்தேயில் எஸ். நவக்சன் வெள்ளி, தங்கப் பதக்கத்தையும் அணி குமித்தே பிரிவில் கே. தரனிஷ், எஸ். நவக்சன், கே.சஜந்தன் வெண்கலப் பதக்கத்தையும் பெற்றிருந்தார்கள்.
அத்துடன் 16, 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பிரிவில் இராமகிருஷ்ணா தேசிய பாடசாலை சம்பியனாகியிருந்தது.
மேலும் எஸ். நவக்ஷன் இவ்வாண்டுக்கான சிறந்த கராத்தே வீரனாக தொடர்ந்தும் இரண்டாவது தடவையாக இவ்வாண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இப்போட்டியில் அதிக புள்ளிகளை பெற்று அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான கராத்தே போட்டியில் இப் பாடசாலை முதலாமிடத்தை சுவீகரித்து பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
54 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
1 hours ago
2 hours ago