Shanmugan Murugavel / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எம்.என்.எம் அப்றாஸ், சர்ஜுன் லாபீர்

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டு அமைச்சின் அறிவுறுத்தலுக்கமைவாக அரசாங்க உத்தியோகத்தர்களின் விளையாட்டுத் திறனையும், உடற்பயிற்சி திறனையும் விருத்தி செய்யும் வகையில் கல்முனை பிரதேச செயலகத்தில் உள்ள உத்தியோகத்தர்களுக்கான 10 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யும் நிகழ்வானது, கல்முனை பிரதேச செயலக கணக்காளர் யூ.எல் ஜவாஹீர் தலைமையில் பிரதேசசெயலக வளாகத்தில் அண்மையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம். ஜெளபர், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர்ஏ.ஆர்.எம். சாலீஹ், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். றம்சான், கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் யூ.எல். பதியூத்தீன், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எல். ரமீஸ் உட்பட உத்தியோகத்தர்பலர் கலந்து கொண்டனர்
கல்முனை பிரதேச செயலக இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.எம். அஸீம் மற்றும் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.என். சபாயி ஆகியோரின் பயிற்சி நெறிப்படுத்தலில் குறித்த உடற்பயிற்சி நிகழ்வு இடம்பெற்றது.
14 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago