R.Tharaniya / 2025 ஜூலை 14 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண ஹொக்கி அணிகளுக்கிடையிலான போட்டியில் அம்பாறை மாவட்ட அணியான காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி 1-0 என்ற கோல்களால் வெற்றிவாகை சூடி கிழக்கு மாகாண சாம்பியனாக மீண்டும் தெரிவாகியுள்ளது.
இதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக ஏழு தடவைகள் மாகாண சம்பியனாக காரைதீவு ஹொக்கி லயன்ஸ் அணி தெரிவாகியுள்ளமை சிறப்பு பதிவாகும்.
இம் மாகாண மட்ட போட்டி ஞாயிற்றுக்கிழமை (13)அம்பாறை பொது மைதானத்தில் நடைபெற்றது.
முதல் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட அணியும் திருகோணமலை மாவட்ட அணியும் மோதின. அதில் திருகோணமலை அணி வெற்றி பெற்றது.
நடப்பு வருட சாம்பியனான அம்பாறை மாவட்ட அணி "பை" Bye மூலம் நேரடியாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது.
இறுதிப் போட்டியில் திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட அணிகள் மோதியதில் அம்பாறை மாவட்ட அணி 1-0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி வாகை சூடியது.
அம்பாறை மாவட்ட அணியை காரைதீவு பிரதேச செயலக பிரிவு லவன் தலைமையிலான கொக்கி லயன்ஸ் அணியினர் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


50 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago