Freelancer / 2023 ஜூலை 11 , பி.ப. 01:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளத்தினால் 2020 ம் ஆண்டு நடாத்தப்பட்ட சுற்றுப்போட்டித் தொடரின் பின்னர் கிடப்பில் போடப்பட்ட அத்தொடரின் இறுதிப் போட்டி அண்மையில் புத்தளம் மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்றது.

புத்தளம் முன்னாள் நகரபிதாவும், புத்தளம் உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவருமான எம்.எஸ்.எம்.ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் புத்தளம் லிவர்பூல் அணியும், நாகவில்லு எருக்கலம்பிட்டி அணியும் மோதிக்கொண்டன.

இப்போட்டியில் லிவர்பூல் அணி 04 : 00 எனும் கோல் வித்தியாசத்தில் எருக்கலம்பிட்டி அணியை வெற்றி கொண்டு கிண்ணத்தை சுவீகரித்தது.

லிவர்பூல் அணிக்காக நப்ரி, ஹிமாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோல்களையும், ஆஷிக் இரு கோல்களையும் பெற்றுக் கொடுத்தனர்.
3 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
17 Apr 2026
17 Apr 2026
17 Apr 2026